சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு 28, 29ல் கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை, சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.