ராகி மாவு – 1 கப்,
ரவை – ¼ கப்,
வெல்லம் – 1 கப்,
நெய் – தேவையான அளவு,
முந்திரி – தேவையான அளவு,
ஏலக்காய் தூள் – சிறிதளவு,
செய்முறை:
ஒரு அடி கனமான வாணலியை சூடுபடுத்திக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் அதில் 1 கப் கேழ்வரகு மாவினை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ¼ கப் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய வெல்ல கரைசலை கேழ்வரகு மாவுடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும். கட்டிகள் எதுவும் இல்லாமல் குறைவான தீயில் வைத்து கலந்து விடவும்.