சென்னை: பூந்தமல்லி அருகே அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தலின்படி, சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என செய்தித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இடம் தேர்வு செய்யும் பொருட்டு திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சி மற்றும் குத்தம்பாக்கம் ஊராட்சி ஆகிய பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் த.மோகன், மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) சாந்தி, கூடுதல் இயக்குநர் (பொ) இணை இயக்குநர் (நினைவகம்) தமிழ் செல்வராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வ.ராஜவேல், பூந்தமல்லி வட்டாட்சியர் இரா.மாலினி, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.ஸ்டாலின், சீ.காந்திமதிநாதன், செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் மற்றும் நில அளவை ஆய்வாளர்கள், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.