சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி அணையில், பழுதடைந்த 2 கதவணைகள் மாற்றப்பட்டு புதிய கதவணைகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 8 மற்றும் 9ம் எண் மணல் வாரி கதவணைகளில் நீர்க்கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் இருந்ததால் உடனே சரி செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது நீர் இருப்பு குறைந்ததால் , 2 கதவணைகளை மாற்றவும் மேலும் 14 கதவணைகளை சீரமைக்கவும் அரசு ₹9.84 கோடி நிதி ஒதுக்க, அதற்கான பணிகள் தொடங்கின. செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.