திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி அணையில், பழுதடைந்த 2 கதவணைகள் மாற்றப்பட்டு புதிய கதவணைகள் பொருத்தும் பணி தொடங்கியது. அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 8 மற்றும் 9ம் எண் மணல் வாரி கதவணைகளில் நீர்க்கசிவு ஏற்பட்டது.
தொடர்ந்து தண்ணீர் இருந்ததால் உடனே சரி செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது நீர் இருப்பு குறைந்ததால் , 2 கதவணைகளை மாற்றவும் மேலும் 14 கதவணைகளை சீரமைக்கவும் அரசு ரூ.9.84 கோடி நிதி ஒதுக்க, அதற்கான பணிகள் தொடங்கியது. கதவணைகள் பழுதுபார்க்கும் பனி கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமீட்டுள்ளனர்.