இடைப்பாடி, நவ.6: விடுமுறை தினத்தையொட்டி பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள், விசைப்படகில் சென்று மகிழ்ந்தனர். மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக தண்ணீர் செல்கிறது. மேலும், மின்சார உற்பத்திக்கு தண்ணீர் தேக்கப்படுவதால், எப்போதும் கடல் போல் நீர் நிரம்பி காட்சியளிக்கும். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், பல்வேறு மாவட்டப் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்தனர். அவர்கள் விசைப்படகில் சென்று சவாரி செய்து மகிழ்ந்து படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பூங்கா, மூலப்பாறை பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில்களில் வழிபட்டனர்.