திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி சார்பில் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி விழுப்புரம், அம்பேத்கர் திடலில் மனிதம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதனையடுத்து பூந்தமல்லி ஆண்டரசன் பேட்டையில் உள்ள பூவை மூர்த்தியார் திடலில் மாநாடு குறித்த பூந்தமல்லி தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ.கே.சிவராமன், ஒன்றிய செயலாளர் எம்.பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய நிர்வாகிகள் கே.குமார், ஆர்.பரந்தாமன், என்.தணிகா, எம்.மகேஷ், சி.பி.நாகராஜ், பாண்டியன், கே.பாஸ்கர், ஆர்.மனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பா.காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முடிவில் ஒன்றிய பொருளா்ளர் கே.வடிவேல் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மனிதம் காப்போம் மாநாட்டில் பூந்தமல்லி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்து கொள்வோம் என உறுதி அளித்தனர். மேலும் மாநாடு குறித்து சுவர் விளம்பரங்கள், பேனர் விளம்பரங்கள் அதிக அளவில் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.