பொன்னேரி: பொன்னேரி அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்ெகாலை தற்கொலை செய்து கொண்டார். இவர் அடித்து கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அத்திமரம் ஒன்றில் நேற்று காலை ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொன்னேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்ட நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் குடோனில் பணியாற்றி வருவதும், இவர் ஒடிசாவை சேர்ந்த சஷிகாந்தா கொடுவா(25) என்பதும் இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், தூக்கிட்ட நிலையில் மரத்தில் கிடந்ததால் இவரை யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு மரத்தில் தொங்க விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.