பொன்னேரி: பொன்னேரி தொகுதியில் உள்ள கிராமங்களில் புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி பேருந்து சேவை தொடங்க வலியுறுத்தல். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கோரிக்கை மனு அளித்தார். பழவேற்காடு, கடப்பாக்கம், தத்தமஞ்சி, காட்டூர், மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை வைத்தார். ஜூலைக்குள் புதிய பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
பொன்னேரி எம்.எல்.ஏ. முன்வைத்த பேருந்து கோரிக்கைகள்:
* சென்னை உயர்நீதிமன்றம் முதல் காட்டுப்பள்ளி வழியாக பழவேற்காடு வரை பேருந்து சேவை வேண்டும்.
* பொன்னேரி முதல் சுண்ணாம்புக்குளம் வரை (வழி: மெதூர், ஆவூர், கோளூர், பெரிய கரும்பூர், தேவம்பட்டு, சேகன்யம்).
* பொன்னேரி முதல் தேவராஞ்சேரி, ஏறுசிவன், மடிமை கண்டிகை, ஆசானூர், வஞ்சிவாக்கம், தத்தமஞ்சி, பழவேற்காடு வரை.
* மீஞ்சூர் முதல் கிளாம்பாக்கம் வரை, சென்னை வெளிவட்ட சாலையில் (Outer Ring Road) பேருந்து சேவை வேண்டும்.
* சோழவரம் ஊராட்சி ஒன்றியம், விச்சூர், வெள்ளிவாயல் ஆகிய கிராமங்களுக்கு திருவொற்றியூர் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும்.
* பொன்னேரி முதல் மீஞ்சூர் வரை கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்
* பழவேற்காடு, கடப்பாக்கம், தத்தமஞ்சி, காட்டூர், மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும்.