திருவள்ளூர்: பொன்னேரி அருகே உத்தண்டிகண்டிகையை புதிய ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் அமர்ந்து உத்தண்டிகண்டிகை கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனுப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள உத்தண்டிகண்டிகையை பிரித்து புதிய ஊராட்சி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.