திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 27ல் திருமணம் ஆன லோகேஸ்வரி, மறுவீட்டுக்காக தாய் வீட்டுக்கு வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தற்கொலையா என பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.