*சூறை காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன
பொன்னமராவதி : பொன்னமராவதியில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் என கஜா புயல்போல காற்றுடன் பலத்த மழைபெய்தது. இதில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வெப்பம் கடுமையாக இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை பொன்னமராவதியில் திடீர் என சிறிது நேரம் மழை பெய்தது. இதன் பின்னர் திடீர் என கஜா புயல்போல கடும் சூறை காற்றுடன் புகை போல மழை பெய்தது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் தகர சீட்டுகள், போர்டுகள் பறந்து விழுந்தன.
பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளது. பொன்னமராவதி நகரில் நேற்று மாலை திடீர் என காற்றுடன் சுழட்டிய மழையினால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டது. ஆயினும் 10நிமிசத்தில் காற்று மழை நின்றது. இதனால் வெப்பம் தனிந்து காணப்பட்டது.