பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே விவசாய பணியில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். வயலில் இறங்கி நடவு செய்தனர்.பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் இயற்கை விவசாய முறைகளை அறிந்து கொள்ளும் வகையிலும், இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்கும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் இயற்கை விவசாயிக்கான மாநில விருது பெற்ற கல்லம்பட்டி வசந்தா, கணேசன் தம்பதியினர் ஆலவயலில் உள்ள வயலில் இயற்கை விவசாயம் செய்வதற்கான முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் மாணவ, மாணவிகளிடையே விளக்கி பேசி அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினார்.
மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு வசந்தா கணேசன் பதில் அளித்தார். விவசாயத்தை பார்த்த ஆர்வம் அடைந்த மாணவ மாணவிகள் வயலில் இறங்கி நாற்று நட்ட பெண்களிடம் நடவு செய்யும் முறைகளை கேட்டறிந்து நாற்று நட்டதோடு, களைப்பிடுங்கும் பணியிலும் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.