சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 4 நாட்களூக்கு கூடுதலாக 12,216 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 800 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 900 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இன்று பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 900 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 1,082 பேருந்துகளும் இயக்கபடவுள்ளன. வெளியூர்களில் இருந்து மதியம் மற்றும் மாலை நேரங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் சென்னைக்கு நள்ளிரவில் வரும் என்பதால், பயணிகள் சென்னையில் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து இரவு நேர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement


