சென்னை: 2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 1 கோடியே 77 லட்சத்து 64,776 சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு 1.772 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.