Thursday, February 22, 2024
Home » பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையின் போது பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, அதன்படி, வண்டி எண்(06003) தாம்பரம்-நெல்லை இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஜன.11,13 மற்றும் 16ம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் நெல்லை-தாம்பரம் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06004) நெல்லையிலிருந்து ஜன.12,14 மற்றும் 17ம் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில், தாம்பரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்,தென்காசி,பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம்,கள்ளிடைகுறிச்சி,சேரன் மகாதேவி,நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல தாம்பரம்-தூத்துக்குடி (06001) முன்பதிவில்லா சிறப்பு ரயில், ஜன.14 மற்றும் 16ம் தேதி காலை 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடி-தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் வண்டி எண்(06002) ஜன.15 மற்றும் 17ம் தேதி இயக்கப்படும். இந்த ரயில் காலை 6 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துகுடி மேலூர், தூத்துகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

You may also like

Leave a Comment

sixteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi