புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடி மரம் அருகே சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடி மரம் அருகே சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
புதுவை ரயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புதுவை ரெயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பெருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.