மதுரை: பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரிய வரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கப்பூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? என்றும், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஆவணங்கள் உள்ளதா என்றும் சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி பொன்மாணிக்கவேல் மனு தொடர்ந்து இருந்தார்.
பொன் மாணிக்கவேலை கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் சிபிஐ வாதம்
previous post