சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் – ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். ஏப்ரல், 2025ல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம், துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் மூலம் நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் https://dte.tn.gov.in < http://www.dte.tn.gov.in > என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 18ம் தேதி முதல் 23ம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட் 25ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். எழுத்து தேர்வுகள் 30ம் தேதி தொடங்கி ஜூலை 16ம் தேதி வரை நடைபெறும்.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
0