சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் வருகிற பருவ தேர்வுகளின் போது, அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிற்சார் கல்வியினை வழங்கி வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் அரியர்ஸ் வைத்துள்ள பாடங்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் படி, அந்த மாணவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது, அரியர் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளது.
இது குறித்த விவரங்களை < https://dte.tn.gov.in > என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரி அரியர் எழுத சிறப்பு வாய்ப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
0