ஈரோடு: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விதிகளை மீறி கழிவு நீரை வெளியேற்றிய புகாரில் கடந்த மாதம் 5 ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலைகளில் சரியான முறையில் கழிவு நீரை வெளியேற்ற, அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.