நெல்லை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை நினைத்து இபிஎஸ் வெட்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் , “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. சிபிஐக்கு மாற்றியதை இபிஎஸ் பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும்” என்றார்.
“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை நினைத்து இபிஎஸ் வெட்கப்பட வேண்டும்” – கனிமொழி எம்.பி
0