கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு என்னுடைய பாராட்டு வாழ்த்துகள். அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, மனித நேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட கொடுங்காயத்தில் இடப்பட்ட மாமருந்தாக தீர்ப்பு அமைந்திருக்கிறது. இதில் அரசியல் கட்சிகள் யாரும் உரிமை கோருவதில் நியாயம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.