சென்னை: தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டத்தில் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றவர்கள் கள் தடை பற்றிய புரிதல் இல்லாமல் கள்ளுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக ‘கள்’ கட்டாயம் இருக்கும். பல வருடங்களுக்கு முன்பு நடந்த 4 மாநில தேர்தலில் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்த போது அவை தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்தது. அந்த சக்தி கள்ளுக்கு நிச்சயம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.