சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவநாதனின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். மயிலாப்பூரில் உள்ள தேவநாதனின் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை. ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் தொடர்புடைய 11 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் போலீசார் சீல் வைத்தனர்.