செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே புத்தேரியில் இருக்கக்கூடிய, தனியார் கல்லூரியில், ஆயிரக்கணக்கானோர் படித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதே போன்று, மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், படித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும். போதை புழக்கத்தை தடுப்பதற்காக, தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கையானது, மேற்கொண்டு வருகிறது. அந்த பல்வேறு மேற்கொண்டிருந்தாலும், இன்று புத்தேரியில் இருக்கக்கூடிய, தனியார் விடுதியில் மாணவ, மாணவிகள் தங்கக்கூடிய இருபத்தி ஆறு விடுதிகளில், ஆயிரம் போலீஸார், அதிகாலை முதல், தற்போது வரை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில், ஒரு குறிப்பிட்ட விடுதியில் மட்டும், முப்பதுக்கும் மேற்பட்ட, மாணவர்கள், போதை வஸ்துக்கள், மற்றும், மாத்திரைகள், அதே போன்று, கஞ்சா வைத்திருந்த, முப்பது மாணவர்களை அதிரடியாக, கைது செய்திருக்கிறார்கள். சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்!