கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கொலை குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தாழங்குடா, தேவனாம்பட்டினம் பகுதிகளில் 40-வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.