ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(40). மாற்றுத்திறனாளியான இவருக்கு, செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு கடந்த ஜூன் 14ம் தேதி பேரையூர் போலீஸ் எஸ்பியின் தனிப்பிரிவு போலீஸ் லிங்கசாமி வந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கசாமி, தங்கவேலுவை கடுமையாக தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. லிங்கசாமிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. புகாரின்படி பேரையூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ்காரர் லிங்கசாமியை ஜூன் 25ம் தேதி எஸ்பி சந்தீஷ் சஸ்பெண்ட் செய்த தகவல் தற்போது வெளியானது.
மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
0
previous post