கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (45). இவர் மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணியை முடித்துவிட்டு மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா, அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (39) என்பவரை கைது செய்தனர்.