சென்னை: போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பழனிசாமி என்பவர் கொலை வழக்கில் கோகுல கண்ணன் என்பவர் விசாரணைக்கு சென்றுள்ளார். விசாரணைக்கு அழைத்து சென்ற கோகுல கண்ணன் உயிரிழந்த வழக்கில் கோகுல கண்ணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை ஒரு மாதத்தில் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை 7 போலீசாரிடம் இருந்து வசூலிக்கவும், 7 போலீசாருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது .
போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
0