கோவை: காரமடையை அடுத்த பிளிச்சி பகுதியில் ரூ.312 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் சைலேஷ் குமார் ஆய்வு செய்தார். ஆண், பெண் கைதிகளுக்கான சிறைச்சாலை, சிறைக் காப்பாளர் குடியிருப்பு என 3 கட்டங்களாக நடைபெறும் பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.