சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் 20 உதவி கமிஷனர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர காவல்துறை மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான விசாரணை பிரிவு-2 உதவி கமிஷனராகவும், எண்ணூர் உதவி கமிஷனராக இருந்த மனோஜ்குமார் வகுப்புவாத புலனாய்வுப் பிரிவு உதவி கமிஷனராகவும், வடபழனி உதவி கமிஷனராக இருந்த அருண் சந்தோஷ் முத்து நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராக இருந்த வரதராஜன் சென்னை பெருநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி கமிஷனராகவும், செம்பியம் உதவி கமிஷனராக இருந்த பிரவீன்குமார் சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி கமிஷனராக இருந்த சையத் பாபு தரமணி உதவி கமிஷனராகவும், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த அனந்தராமன் வடபழனி உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சச்சிதானந்தம் என்.கே.பி.நகர் உதவி கமிஷனராகவும், சென்னை பெருநகர மேற்கு பயிற்சி மையம் உதவி கமிஷனராக இருந்த முனுசாமி அண்ணாநகர் உதவி கமிஷனராகவும், சென்னை பெருநகர காவல்துறை மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக இருந்த விஜயராமுலு கிண்டி உதவி கமிஷனராகவும், தோட்ட நலன் மற்றும் சமூக காவல் உதவி கமிஷனராக இருந்த மேத்யூ டேவிட் ெசன்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், அண்ணாநகர் உதவி கமிஷனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சென்னை பெருநகர காவல்துறை மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாகவும், துறைமுகம் உதவி கமிஷனராக இருந்த காந்த் சென்னை பெருநகர பயிற்சி மையம் உதவி கமிஷனராகவும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ராஜ்பால் ராயபுரம் உதவி கமிஷனராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த ராஜசேகரன் துறைமுகம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், கிண்டி உதவி கமிஷனராக இருந்த சிவா மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், ராயபுரம் உதவி கமிஷனராக இருந்த மகேந்திரன் சென்னை குற்ற ஆவணக் காப்பகம் உதவி கமிஷனராகவும், சென்னை குற்ற ஆவணக் காப்பகம் உதவி கமிஷனராக இருந்த ஜான் சுந்தர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், வகுப்பவாத நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த செம்பேடு பாபு வளசரவாக்கம் உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வளசரவாக்கம் உதவி கமிஷனராக இருந்த கவுதம், மத்தியக் குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.