சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தியை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் CBCID போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆள்கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அவரை கைது செய்து காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி உள்ளார். இதனிடையே ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெகன் மூர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூவை ஜெகன்மூர்த்தியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் விவரங்களை சேகரித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.