பாடாலூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்: பாரம்பரிய உடைகளை அணிந்து காவலர்கள் அசத்தல்
பாடாலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று 14ம் தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். காவல் நிலைய நுழைவு வாயிலில் கரும்பு கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. வண்ண கோலமிடப்பட்டிருந்தது.



