மதுரை: மதுரை புதூர் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக புகார் தெரிவித்து, மதுரை, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கவிதாவிடம், எஸ்ஐ சண்முகநாதன்(35), ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதல்கட்டமாக ரூ.30 ஆயிரத்தை, புதூர் புறக்காவல்நிலைய பகுதிக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் நேற்று அங்கு சென்று எஸ்ஐ சண்முகநாதனிடம் பணத்தை கொடுத்தார். உடனடியாக அந்த பணத்தை சண்முகநாதன், தனது டூவீலர் முன்புற பேக்கில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்ஐ சண்முகநாதனை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைதான சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சிறந்த பணிக்கென மாவட்ட நிர்வாகத்தால் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


