திருச்சி: போலீஸ் குறித்து அநாகரிகமாக பேசிய சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீஸ் அதிகாரிகள் குறித்து கொச்சைப்படுத்தி ஒருமையில் அநாகரிகமாக பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது. இந்த வீடியோவை ஒருவர் பகிர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாரை டேக் செய்திருந்தார்.
இந்நிலையில் எஸ்பி வருண்குமார் தன் எக்ஸ் தள பக்கத்தில், சீமானின் அநாகரிகமான, அவதூறு பேச்சுக்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீதும், கோர்ட் மீதும் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. பொது மேடையில் இவ்வாறு அநாகரிகமாகவும், கொச்சையாகவும் பொய்களை பேசுவதை பொதுமக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.