சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகபோக்குவரத்து காவல்துறை அறிaவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சி சார்பில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலைகல்லறை சாலை சந்திப்பு வரை மழைநீர் வடிக்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால்மேற்படி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றமானது செயல்படுத்தப்பட உள்ளது. மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் டி.எச்.சாலைகல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கல்லறை சாலைஎம்.எஸ் கோயில் தெருஎஸ்.என்.சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச்.சாலை அப்போலோ மருத்துவமனை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். மின்ட் பகுதியில் இருந்து வரும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் டி.எச். சாலையை நோக்கி சென்று டி.எச். சாலை அப்போலோவை அடையலாம். டி.எச்.சாலை அப்போலோ மருத்துவனை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி.எச். சாலை நோக்கிச் சென்று வழக்கமான பாதையில் சென்று மின்ட் சந்திப்பை அடையலாம். அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.