திருப்பதி : திருப்பதியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காவல்துறை ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி காவல்துறை போலீஸ் அணிவகுப்பு மைதான ஆயுதப்படை பிரிவில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், எஸ்பி பரமேஸ்வர் கலந்து கொண்டார் வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து பேசியதாவது:
பொதுமக்கள் நலனுக்காக போலீசார் அயராது உழைத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை கொண்டாடும் வகையில் ஆயுதபூஜை செய்யப்படுகிறது. திருப்பதி மாவட்டத்தில் அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் வாகனஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்கள் அனைவரும் தங்கள் கடமைகளை நல்ல ஆரோக்கியத்துடனும், கடினமான காலங்களில் வெற்றிகரமாகவும் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி லட்சுமிநாராயணா, டிஎஸ்பிக்கள் கிரிதரா, சுரேத்ரா, யஷ்வந்த், திஷா, ரவீந்திரா, எஸ்ஐக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.