சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்-4, இரு சக்கர வாகனங்கள்-7) வரும் 21ம் தேதி காலை 11.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 20ம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முன் பணமாக ₹1000 செலுத்தி பதிவு செய்து கொண்டு, ஏலத்தில் பங்கு பெறுவதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களை ஏலத்தில் எடுத்தவர் உடனடியாக ஏலத்தொகை ரொக்கமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.