சென்னை: காவல்துறை நவீன மயமாக்கும் திட்டம் குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், காவல்துறையினருக்கான பாதுகாப்பு உபகரணங்கள், சிசிடிவி கேமரா பொருத்துதல், வேலைப்பளுவை குறைத்தல், நவீன தொழில்நுட்ப வாகனங்களை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.