திருப்பத்தூர்: ஆலங்காயம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி வினோத் கைது செய்யப்பட்டார். அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜரான உதவி ஆய்வாளர் ஜெகந்நாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாவட்ட பாஜக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்தை திருப்பத்தூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.