தென்காசி: காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த கருத்தபாண்டி என்பவர் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். காவலர்கள் மீது ஜேசிபி இயந்திரத்தை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மனுதாரர் தினமும் காலை 10.30, மாலை 5.30க்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!!
0