பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, விடுமுறை நாட்களையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.அவர்கள் அருவியில் கொட்டிய தண்ணீரில் ஆனந்த குளியல்போட்டு மகிழ்ந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஜூன் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையால்,ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.ஒரு வாரத்துக்கு முன்பு, தடை நீக்கப்பட்டதால்,பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த வாரத்தில் கடந்த சில நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தாலும்,நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாளையொட்டி,வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் பலர், ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் ஆனந்த குளியல் போட்டனர்.தொடர் விடுமுறையையொட்டி குவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.