பெங்களூரு: போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சிஐடி அதிகாரிகள் முன் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்.2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது புகார் அளிக்கப்பட்டது. எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17-ம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது வழக்கு பதிவுசெய்தனர். எடியூரப்பா இன்று காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
83