செங்கல்பட்டு: போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி பிடிபட்டார். 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைப்பதற்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ குற்றவாளி ஃபக்ருதீன் (20), தப்பியோடினார். இரவு முழுவதும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மேலரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி பிடிபட்டார்
0
previous post