எப்படி பேனா, சில்லரைகள் நினைத்தவுடன் எடுக்க வசதியாக இருக்கட்டும் என பாக்கெட்டு
களில் போட்டு வைத்துக் கொள்கிறோமோ அதே மாதிரிதான் இந்த பாக்கெட் ( Pocket) ஆப். இன்டர்நெட்டில் இங்கே முகநூலில் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கும் போது இன்ஸ்டாவில் ஒரு முக்கியத் தகவல் நம்மைக் கடந்து செல்லும். அடடே இந்த போஸ்ட்டை சேமிக்கவில்லையே என்னும் தவறவிடும் இணையதளங்கள், போஸ்ட்கள், குறிப்பாக பெரிய கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் எல்லாம் அப்பறம் படிக்கலாம் என புக்மார்க் செய்து வைத்தாலும் டேட்டா சுத்தம் செய்கையில் அனைத்தும் காணாமல் போய்விடும். ஆனால் பாக்கெட் ஆப்பின் வேலை உங்கள் பிரவுசர் அருகிலேயே ஒரு பாக்ஸ்+டிக் மார்க்குடன் ஒரு பட்டனை உருவாக்கிவிடும். பார்த்த மாத்திரத்தில் நீங்கள் அப்படியே சேமித்துக் கொள்ளலாம். சிலர் பின்னர் படிக்கலாம் என தனக்குத் தானே மெஸ்ஸேஜாக அல்லது மெயிலில் என அனுப்பிக் கொள்வதைப் பார்க்கலாம். அதெல்லாம் தேவை இல்லை. இந்த ஒற்றை ஆப் போதும் உங்கள் தேவைகள் அனைத்தையும் சேகரித்து வைக்கும். ஆரம்பத்தில் ரீட் இட் லேட்டர் (Read it Later) என்னும் பெயரில்தான் இந்த ஆப் செயல்பட்டு வந்தது. இப்போது பாக்கெட் என்னும் பெயர் உலக அளவில் 100 மில்லியன் கணக்காளர்களைக் கொண்டு இயங்குகிறது. மோஸில்லா கார்பரேஷன் நிறுவனத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப் ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ், மேக் உள்ளிட்ட அனைத்துத் தளங்களுக்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாக்கெட் ஆப்!
previous post