சென்னை: பிஎம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. பி.எம். ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு தருவதில்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் “60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 14,500 பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளும் அடங்கும். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என அண்ணாமலை கூறியது தவறான தகவல்” என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
பிஎம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல்: உண்மை சரிபார்ப்பகம்
0