நாகர்கோவில்: நாகர்கோவிலில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அளித்த பேட்டி: அதிமுக, பாஜ, தமாகா கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கிறேன். செப்டம்பர் மாதத்திற்கு பின்பு மிகவும் சூடு பிடிக்கும். பாமக பிரச்னைக்கு பாஜ காரணம் அல்ல. இந்தியா முழுவதும் தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளிலும் உள்கட்சி பூசல்கள் எழுவது வாடிக்கை. பின்னர் அவை சரியாகிவிடும். பாமக, தவெக, பாஜ கூட்டணிக்கு வரும்.
தேமுதிகவிற்கு எம்பி சீட்டு வழங்குவதாக கூறியுள்ளார்கள். பாலியல் வழக்கில் சிக்குபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து தேர்தல் பிரசாரத்திற்காக பயணம் தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.