திண்டிவனம்: பாமகவில் நடந்து வரும் அதிகார போட்டியில் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுடன், அந்த பதவிகளுக்கு உடன் புதியவர்களை நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில், பாமகவின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கி உத்தரவிட்டுள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் புதிய செயலாளராக மேட்டூர் அணை வட்டத்திற்குட்பட்ட வெடிக்காரனூர் வி.இ.ராஜேந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு மேட்டூர், ஓமலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே கட்சியின் பொறுப்பாளர்கள்அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பாமக சட்டமன்ற உறுப்பினரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.