சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாமக எம்எல்ஏ அருள் இன்று வீடு திரும்பினார். ஐயா வந்து தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புறப்படுவதாக பேட்டியளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அருளுக்கு ஈசிஜி மற்றும் இதர இதயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் இன்று சேலம், தருமபுரி மாவட்டங்களின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் பொதுக்குழு கூட்டம் நடந்த முடிந்த உடன் பாமக எம்எல்ஏ அருள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.